ரஷ்ய நாடு தற்போது உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து ஆயிரம் நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக ரஷ்யா தனது கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்கரைனின் கிழக்கு பகுதி ஆன நிப்ரோ பகுதியில் தொழில் நிறுவனங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா எந்த வகை ஏவுகணையை பயன்படுத்தியது என  தகவல் எதுவும் வெளியிடவில்லை. இந்த ஏவுகணை தாக்குதலை உறுதி செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து கீவ் சார்ந்த ஊடகம் ஒன்று இந்த ஏவுகணை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர், ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணை RS 26 ருபேஸ் இது சுமார் 5800 கிலோமீட்டர் வேகத்தில் சென்று தாக்குதல் நடத்தும் சிறந்த ஏவுகணை வகையை சார்ந்ததாகும். இந்த ஏவுகணை மூலம் 800 கிலோ வரை ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். இந்த ஏவுகணை கடந்த 2012 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்தது. ஏவுகணை சுமார் 12 மீட்டர் நீளமும், 36 டன் எடையும் கொண்டுள்ளது. இவ்வாறு அந்த ஊடகம் தெரிவித்திருந்தது.