கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்…. கலைஞசரை மிக சிறந்த செல்வந்தன் ஆக்கியது சினிமா. கலைஞர் 1949இல் மார்டன் தியேட்டரில் வாங்கிய சம்பளம்  மாதம் 500 ரூபாய். அன்னைக்கு சிவாஜி கணேசன் உடைய சம்பளம் மாசம் 250 ரூபாய்…. மாதம் 500 ரூபாய் கலைஞசர்  வாங்கும் பொழுது….  தங்கத்தின் விலை ஒரு கிராம் பத்து ரூபாய்….  10 கிராம் 100 ரூபாய்…. அவருடைய ஒரு மாத சம்பளத்தில் 50 கிராம் தங்கம் வாங்கலாம்…..

கலைஞருடைய 1 மாதம் சம்பளத்தில் 50 கிராம் தங்கம் வாங்கலாம். இன்றைய மதிப்பிற்கு மூணு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு மனிதன் ஒரு ஸ்டுடியோவில் போய் வேலைக்கு சேரும்  போது நீங்க வரணும்ன்னு முதலாளி விரும்பி கூப்பிடுகிறார்….

கவி காமோ ஷெரீப் தான் கலைஞ்சரை கூப்பிட்டுக் கொண்டு வேளையில் சேர்த்து விடுகின்றார். கவி காமோ ஷெரீப் கலைஞ்சரிடம் கேட்காமலே நான் சொன்னால் தம்பி கேட்பாரு வர சொல்லுறேன்னு சொல்லி  சம்பளத்தை ஒத்துக்கிட்டாச்சு. ஒத்துக்கிட்டால் மாத  சம்பளம் 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு ஒருத்தர் வேலைக்கு போகிறார். வேலைக்கு போனதால் தான்,  கலைஞர் முதல் முதலாக 1957இல் எம்எல்ஏவாக குளித்தலையில் ஆவதற்கு முன்னாடியே கலைஞரை கோபாலபுரம் வீட்டை 1955இல் சொந்த வீடாக வாங்கி விடுகின்றார்.

கலைஞரை சொந்த வீடோடு அரசியலுக்கு வர வைத்ததற்கான காரணம் சினிமா. சினிமாவில் பெரும் பணமும், பெரும்  புகழும் ஈட்டினார்.  திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களில் முதன்முதலாக கார் வாங்கியது கலைஞர் தான். கலைஞரின் காரில் தான் அண்ணாதுரை பயணம் செய்திருக்கிறார். இது எல்லாம் சாத்தியமாக்கியது கலைஞருடைய எழுத்து. அன்றைக்கு யார் கூட்டம் கூப்பிட்டாலும் அண்ணாதுரை தேதி குடுப்பார்.

யார் கூட்டம் கூட்டினாலும் நெடுசெழியன் தேதி, மதியழகன் தேதி கொடுப்பார். ஏனென்றால் மக்களிடம் இந்த கருத்தை கொண்டு போய் சேர்ப்பதற்கு இரண்டே வழி தான் இருந்தது. ஒன்று பேச்சுகள்… இன்னொன்னு எழுத்து. அதனால் தான் திராவிட காட்சிகளில் அத்தனை பத்திரிகையாளர்கள் ஆரம்பிக்கப்பட்டன.   எல்லாரும் எழுதி குவித்தார்கள். மூன்றாவதாக ஒரு வாகனம் வந்து சேர்ந்தது.   நாம் எழுதிய எழுத்தை  இன்னொருவர் பேசுவது…. அது சினிமா…. அது நாடகம்.. தனியாக பேசுவது..  அவர் கருத்தை அவரே எழுதுவது…..  அவர் எழுதிய கருத்தை இன்னொருவர் பேசுவது என தெரிவித்தார்.