
குர்மித் சிங் என்கிற சேரா என்பவர் சுமார் 20 வருடங்களாக சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கிறார். ஒரு பாதுகாவலராக மட்டுமில்லாமல் இவர்கள் இருவர் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது என்றும் கூறலாம். சல்மான் கானுக்கு மிகவும் விசுவாசமானவர் சேரா.
பத்திரிக்கை ஒன்றுக்கு சேரா பேட்டி அளித்த போது கூட சல்மான் கான் தனக்கு கடவுள் போன்றவர் என கூறியுள்ளார். இந்நிலையில் சில தினங்களாக சேரா சமூக வலைதளத்தில் பிரபலம் ஆகியுள்ளார். அவர் புதிதாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கியுள்ளார்.
இந்த காரின் மதிப்பு 1.4 கோடி என்று கூறப்படுகிறது. புதிய காரின் அருகில் நின்றவாறு புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சேரா கடவுளின் ஆசியால் தங்கள் வீட்டிற்கு புதிய நபரை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி சேராவின் இத்தனை வருட விசுவாசம் தான் அவரது இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.