இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். வருமான வரித்துறையின் கூற்று அடிப்படையில், 2022-ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளில் (ITR) சுமார் 50% சம்பளம் பெறும் ஊழியர்களால் செய்யப்பட்டவை ஆகும்.

இந்த வரி செலுத்துபவர்கள் பட்ஜெட் 2023 சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வுக்கு பிந்தைய நீண்டகால பலன்களையும், தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் மலிவு விலையில் வீடுகளையும் வழங்கும் என எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கம் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவேண்டும் மற்றும் கையில் செலவழிக்கக்கூடிய வருமானத்தை உயர்த்த வரித் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

(2023) பட்ஜெட்டிலிருந்து சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்

# வருமானம் வரி அடுக்கு

# வீடு வாங்குவோருக்கு வரிவிலக்கு வரம்பு

# தனி நபர் கடன்களுக்கு விலக்கு

# ஒரே மாதிரியான மூலதன ஆதாய வரி விதிப்பு