நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம் தேதி முதல் அமலாகியுள்ளது. அதன் விவரம்,

7 முதல் 15 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மக்களுக்கு 5 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 5.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

46 முதல் 129 நாட்களுக்கு மக்களுக்கு 6.25 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

180 முதல் 210 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு மக்களுக்கு 6.6 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான திட்டத்திற்கு மக்களுக்கு 6.25 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.