வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பரிசு வழங்கியுள்ளார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து 25 கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பேச்சு போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.