பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில், 3 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு வந்த முதல் நாளே இந்த சிறுமி இத்தகைய கொடுமையை சந்தித்தது பெற்றோரையும் சமூகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அப்போது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோவில், ஆசிரியை சிறுமியை தாக்கி, கீழே விழ வைத்து தொடர்ந்து சத்தமிட்டது தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

“>

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியையை கைது செய்துள்ளனர். பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குவது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.