
மும்பையில் உள்ள தனியார் வங்கியில் வாலிபர் ஒருவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்த வங்கியில் 41 வயது உள்ள மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்தப் பழக்கத்தை ஓட்டுனர் தவறான எண்ணத்தோடு நினைத்துள்ளார். அதன் பின் அந்தப் பெண்ணை அவர் பாலில் வன்கொடுமை செய்துள்ளார்.
அதோடு பாலியல் வன்கொடுமை செய்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அந்தப் பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையின் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.