
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, புரையோடி கிடக்கின்ற இந்த அரசியல் கட்சிகளை துரத்தி, அடித்து… ஒரு குடும்ப அரசியல்… 3ஆவது தலைமுறை… செல்போனில் தான் 3G, 4G, 5G பார்த்துள்ளோம். தமிழ்நாடு அரசியல் பார்த்தால், இது மூன்று ஜி, நான்கு ஜி, இந்து ஜீ. மூன்று ஜி என்றால், கருணாநிதி அவர்களுக்கு பிறகு ஸ்டாலின்…. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி 3G …. உதயநிதியின் மகனின் இன்பநிதி வந்தால் 4G.
முரசொலி மாறன்… முரசொலி மாறனுக்கு பிறகு தயாநிதி மாறன் வந்தால் 2ஜி, 3ஜி. செல்போனில் பார்க்கக்கூடிய 2ஜி 3ஜி 4ஜி இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய அரசியலில் தலைமுறை தலைமுறை அரசியல் பண்ணுகிறார்கள். உங்களுடைய தொகுதி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அண்ணன் KN நேரு அவர்கள், அவருடைய பையனை நிறுத்துவதற்கு ஐடியா பண்ணி வேலையை ஆரம்பித்துவிட்டார்.
தமிழ்நாடு முழுவதுமே கொத்தடிமைகளாக திமுக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர்களுக்கு பிறகு அவர்கள் பையன். பையனுக்கு பிறகு அவுங்க பொண்ணு. இங்கு ஆட்சி நடப்பது உங்களுடைய குழந்தைகளுக்காக இல்லை… உங்களுடைய குழந்தைகள் முன்னேற்றத்திற்காக இல்லை…. அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்வதற்காக இங்கு ஆட்சி நடக்கவில்லை…. ஒரே ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். மகனும், மருமகனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி என தெரிவித்தார்.