
தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது. இதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காரில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது பின்னால் இருக்கையின் கீழ் உள்ள ரகசிய அறையில் கஞ்சாய் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காரில் வந்த பால்பாண்டி(40), ரவிக்குமார்(28), வீரப்பன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் இருந்து கடல் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கொண்ட செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் கொண்டு வந்த 103 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.