
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழிசை, ஒரு பத்து நாளா இந்த பிரச்சனை தான். பார்க்க LEO.. கேட்க LEO… போட LEO… சப்போர்ட் LEO…. அனுமதி LEO… என LEO.. LEO.. LEO… LEO -ன்னு போயிட்டே இருக்கு. புதுச்சேரியில நாங்க ஏழு மணிக்கு அனுமதி கொடுத்தோம். அங்க உள்ள ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி கொடுத்த பின்பும், சில அழுத்தம் காரணமாக 7 மணிக்கு அவுங்களால போடா முடியல.. 7 மணிக்கு தான் அவுங்களால போட முடிச்சுது.
அதுவும் தள்ளி போகுது. ஆக ஒரு அரசாங்கத்துல…. ஒரு ஆட்சியர் வேறு மாநிலத்தில… பக்கத்து மாநிலத்தில் கொடுத்தால்… கூட பல அழுத்தங்கள் இங்கிருந்து வந்து, 7 மணி காட்சியை அவங்களால போட முடியவில்லை. இந்த அழுத்தம் வந்து ”ரெட் ஜெயன்ட்” என சுத்த தமிழ்ல…. தூய தமிழ்ல… ஒரு நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை தாண்டினால் பிரச்சனை அப்படின்னு அங்க உள்ள நிர்வாகத்தினர் எனக்கு சொன்னாங்க, எனக்கு தெரியாது.
அதனால எல்லா விதத்திலயுமே ஒரு அரசியலாக பார்கின்றார்கள். விளையாட்டை விளையாட்டாய் பாருங்க என சொல்றாங்க. அப்போ சினிமாவை சினிமாவா தானே பாக்கணும். அப்படி இல்லாம ஒரு மாறி போய்க் கொண்டிருக்கிறது. ஆக இந்த வகையில் எல்லாம், ஒரு சுதந்திரமான…. ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை நான் கேள்விப்பட்டதை இங்கு சொல்கின்றேன் என தெரிவித்தார்.