
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் வணிக வளாகத்தின் பிவிஆர் திரையரங்கம் முன்பாக சீமான் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சீமானின் போராட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தன்னுடைய twitter பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கின் முன்பாக கோமாளித்தனமான போராட்டத்தை நடத்தி இருக்கிறது அட்டகத்தி சீமான் கும்பல். திரைப்படத்தை எடுத்த ஆர்எஸ்எஸ் கும்பல் குறித்தோ, படத்தை ஆதரித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தை சொன்ன பிரதமர் மோடி குறித்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தி, இசுலாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள #TheKeralaStory திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவேண்டாம் என்ற மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, திமுக அரசு திரையிட அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்து சென்னையில்… pic.twitter.com/qN4VzUtoG3
— சீமான் (@SeemanOfficial) May 6, 2023
மாறாக தமிழக அரசையும் திமுக அரசையும் கண்டிப்பதற்கான வாய்ப்பாக தான் சீமான் இதை பயன்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு எதிரான கும்பலை திமுக அரசின் பக்கமாக சீமான் திருப்ப முயற்சி செய்கிறார். இதற்குப் பெயர்தான் சங்கிதனம். மோடி குறித்த தீவிரவாத முகத்தை அம்பலப்படுத்திய பிபிசி ஆவண படத்தை தடை செய்த பாஜக கும்பலுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தான் அஞ்சுகிற கட்சி தான் நாம் தமிழர் கட்சி என பதிவிட்டுள்ளார்.
கேரள ஸ்டோரி திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கத்தின் முன் ஒரு கோமாளித்தனமான போராட்டத்தை நடத்தி்இருக்கிறது #அட்டகத்தி_சீமான் கும்பல்.
திரைப்படத்தை எடுத்த #RSS கும்பல் குறித்தோ,
படத்தை ஆதரித்து வெளிப்படையாக கருத்து சொன்ன மோடி குறித்தோ எந்த கண்டனமும் எதிர்ப்பும் செய்யவில்லை.
மாறாக,… pic.twitter.com/deNENmx2Pl— வன்னி அரசு (@VanniKural) May 6, 2023