
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரமண்டாகுப்பம் பகுதியில் வேலு, ஜெயம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ரூபிகா 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரூபிகா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் அங்குள்ள ஒரு ஆட்டு கொட்டகையில் சேலையால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுகி மயங்கி விழுந்தார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் தன் மகள் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக ரூபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் பெற்றோர்கள் கதறி துடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.