சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது.

இதனால் அந்த 3 பெண்களும் காயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.