காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தன் (93) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவர் தமிழ்நாட்டு தகைசால் விருந்தினை பெற்றுள்ளார். இவர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை ஆவார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மறைந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் வழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு தணக்கம் செய்யப்பட்டது.