தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக பயணங்கள் SETC பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் SETC இன் அனைத்து வகை பேருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள போக்குவரத்து கழகம் www.tnstc.in என்ற இணையதளம் முகவரி மற்றும் 94450 14402, 94450 14424, 94450 14463 என்ற எண்களில் அழைத்து விவரங்களை பெறலாம் என்றும் கூறியுள்ளது.