
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 26 வயதான பெண் ஒருவரின் குழந்தை சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் அன்று இரவு, அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வார்டு பாயாக வேலை பார்க்கும் தனய்பால் என்பவர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு, ஆடைகளை அவிழ்த்துள்ளார். அதோடு இந்த சம்பவத்தை அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் அலறியுள்ளார். உடனே தனய்பால் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். அதோடு அவரது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.