
கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில தலைநகரம் பெங்களுருவில் நடந்த அணைத்துக் கட்சி கூட்டத்தில், தண்ணீர் திறந்து விட முடியாது என்பதற்கு நிறைய காரணங்களாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வறட்சி, மழை இல்லை, நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லை, அணைகளில் தண்ணீர் இல்லை, போன்று நிறைய விஷயங்களை அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன செய்வது ? என அடுத்தடுத்து விசாரிக்கப்படும் என்ற ஒரு விஷயத்தையும் அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
டெல்லிக்கு சொல்லலாமா ? போன்றவை எல்லாம் என மிக விரிவாக அவர்கள் விவாதித்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம் அல்லது காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி ஒழுங்காற்றல் குழு என்று அத்தனை அமைப்புகளிடமும் நாங்கள் சென்று முறையிட இருக்கிறோம்.எங்களிடம் தண்ணீர் இல்லை என்பதை நாங்கள் பேச இருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடருக்குமுன்பாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க போவதாகவும், நாடாளுமன்றத்தில் இந்த விகாரத்தை எடுக்க செல்வதற்கான முயற்சிகளை செய்வது சம்பந்தமாகவும், எல்லா விதமான பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியாக இருக்கக்கூடிய கர்நாடகத்திலேயே அவ்வளவு வறட்சி நிலவுகிறது என்றால் ? அந்த காவிரி நீரையே நம்பி இருக்கக்கூடிய தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு விவசாயத்திற்கும் எந்த அளவுக்கு வறட்சி இருக்கும், மோசமான நிலை இருக்கும் என்பதை கர்நாடக அரசு சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இனி எல்லாமே அரசுகள் அவர்களாக பேசி முடிவெடுக்கும் வகையில் தான் இருக்கின்றது.