
இந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தன் நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா வாக்கர் கதி ஏற்படும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சாத்வி பிராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சாத்வி பிராச்சி கூறியதாவது, ஷ்ரத்தா வாக்கரின் உடல் எப்படி 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்டது எனும் செய்தியில் ஸ்வரா பாஸ்கர் கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. இது போன்ற ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன் ஸ்வரா ஒருமுறை அந்த பிரிட்ஜை பார்த்திருக்க வேண்டும். ஷ்ரத்தா வாக்கருக்கு ஏற்பட்டது போல் ஸ்வராவுக்கும் ஏற்படலாம் என்று அவர் எச்சரிக்கை விடும் அடிப்படையில் நிரூபர்களின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.