
டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார். அவர் முதலில் கோவாவிற்கு சென்ற நிலையில் அதன் பிறகு மார்ச் 12ஆம் தேதி டெல்லிக்கு திரும்பினார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தகவல் தெரிவித்தார்.
அதில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அந்த நபர் ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதோடு அந்த ஓட்டலின் பணியாளர் ஒருவர் அவரை தவறாக தொட்டதாகவும் கூறியுள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான சட்ட உதவி வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிரான பாதுகாப்பு பிரச்சினைகளை மீண்டும் முன் வைத்துள்ளது.