
LRS திட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு TCS வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறை RBIயிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இதுவரைக்கும் வெளிநாட்டுக்கு பணம் செலுத்துவதில் ஐந்து சதவீதம் டிசிஎஸ் இருந்தது. ஆனால் இப்போது அது 20% ஆகியுள்ளது. இது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு வெகுவாக பாதிக்கும்.
சிம்பிளாக சொன்னால், நீங்கள் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணத்தை மாற்றினாலோ அல்லது டெபிட் கார்டு மூலம் வெளிநாட்டுப் பயணத்தை முன்பதிவு செய்தாலும் 20% வரி சுமையை எதிர்கொண்டாக வேண்டும்.