நாடு முழுவதும் மத்திய அரசானது கிராமப்புறங்களில் 100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 6 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13.16 கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் போலி அடையாள அட்டை மற்றும் பணியாற்றிய விருப்பமில்லை போன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் 23 லட்சம் பேரை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 89 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது 6 லட்சம் பேரை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.