
ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தின் வாயிலாக டைரக்டராக அறிமுகமானவர் கோகுல். இதையடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தை இயக்கினார். கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற “ஹெலன்” படத்தை தமிழில் அன்பினிற்கினியாள் எனும் பெயரில் ரீமேக் செய்து இருந்தார். இந்நிலையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை கொரோனா குமார் எனும் பெயரில் உருவாக்க திட்டமிட்டார் கோகுல்.
இப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் சிம்பு “வெந்து தணிந்தது காடு”, பத்து தல என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நிலையில், கொரோனா குமார் துவங்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் “லவ் டுடே” பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இத்தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.