
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.
அங்கு அவர் திடீரென நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.