
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சாகிர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த பத்தாம் தேதி மனோவின் மகன்கள் இருவரும் அவர்கள் வீட்டின் அருகே குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கால்பந்து பயிற்சி இளைஞர்கள் மனோ வீட்டை வேடிக்கை பார்த்தபடி சென்று உள்ளனர். இதனைப் பார்த்த மனோவின் மகன்கள் சந்தேகப்பட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் மற்றும் கிருபாகரன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மதுரை கைது செய்துள்ளனர். மேலும் மனோவின் மகன்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மனோவின் மகன்கள் தரப்பிலையும் தங்களை எதிர் தரப்பினர் தாக்கியதாக புகார் செய்தனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கேமராவில் பாடகர் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயது சிறுவன் உட்பட 8பேர் சேர்ந்து கல் கட்டையால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.