
ஒடிசாவில் வசித்து வருபவர் அஜித் கர்மாகர். இவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருக்கும்போது அந்த வழியே சென்ற நஞ்சுப் பாம்பு ஒன்று அவரை மூன்று முதல் நான்கு முறை கடித்துள்ளது. இதனால் பாம்பை கண்டு பயந்து விடாமல் அஜித் தன்னை கடித்த பாம்பை அடித்து கொன்று அதன் உடலை ஒரு பாலித்தீன் பையில் போட்டு உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அந்தப் பாம்பு ஒரு கொடுமையான விஷமுடைய நாகப் பாம்பு இனத்தை சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தவுடன் அவருக்கு நியூரோடாக்ஸின் மருந்துகளை உடனே செலுத்தியுள்ளனர். தற்போது அஜித் மருத்துவர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று குணமடைய உள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ராஜ்குமார் நாயக் கூறியதாவது, அவரது உடலில் பாம்பு கடித்த தடயங்கள் இருந்தது. மேலும் ரத்த கசிவும் ஏற்பட்டு இருந்ததை உறுதி செய்துள்ளோம். அவர் தன்னை கடித்த பாம்புடன் வந்ததால் உடனடியாக சரியான மருந்தை அவருக்கு செலுத்த அது உதவியது என தெரிவித்து இருந்தார். மருத்துவமனைக்கு தன்னை கடித்த பாம்பை கையோடு பையில் போட்டு கொண்டு சென்ற சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.