
புதுச்சேரி முத்தையால் பேட்டையில் மாதேஷ் 22 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அவற்றைப் பெண்களுக்கும் அனுப்பி கவர்ந்திழுக்கும் வேலையை முழு நேரமாக வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை ஒரு மாலில் சந்தித்து காதலித்து, தியேட்டரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.பிறகு அந்த வீடியோவை வெளியிட்டு பலரையும் அதிர வைத்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாஸ்பேட்டையில் ECR சாலையில் கராத்தே பயிற்சியில் சேர்ந்து, தனது சிக்ஸ் பேக்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல்வேறு பெண்களின் நட்பை பெற்றார்.
இந்நிலையில் கராத்தே பயிற்சிக்கு வந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழகி கடந்த 22-ம் தேதி அந்த மாணவியுடன் தலைமறைவானார். மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாதேஷ் அவரது மனைவி பிரியங்காவிடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார். அப்போது பிரியாங்க்கா தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் பிரியங்காவின் உதவியோடு காவல்துறையினர் மாதேஷிடம் பேசினார். அப்போது மாதேஷ் கூறியதாவது, நான் மும்பையில் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன் உங்களால் என்ன நெருங்க முடியாது என்று காவல்துறையினருக்கு சவால் விட்டார். மேலும் உடன் அழைத்துச் சென்ற மாணவியையும் வற்புறுத்தி பேச வைத்து அதனையும் காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சைபர் கிராம் காவல்துறையினர் உதவியோடு மாதேஷின் இன்ஸ்டாகிராமில் ஐடியில் இருந்து ஐபிடிஆர் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார். அதில் மாதேஷ் ஆந்திரா மாநிலம் கீழ் திருப்பதியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் இருப்பதை கண்டறிந்தனர். பின்பு அங்கு சென்ற காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து மாணவியை மீட்டனர்.
பின்பு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. மாதேஷ் கைது செய்யப்பட்டதை அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த பலர் புகார் தெரிவித்தனர். திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர் பன்னாட்டு கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் வாங்கியுள்ளார்.
அதேப்போன்று புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் ஒன்றரை லட்சமும், தன்னுடன் கராத்தேயில் பயிற்சி பெற்ற மாணவியின் தங்கச்சிக்கு வேலை வாங்கி தருவதாக 25,000 வாங்கியுள்ளார். இதனை அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த அவரது மனைவி பிரியங்கா அவர் அணிந்திருந்த தாலியை கழட்டி மாதேஷ் முகத்தில் வீசினார்.
அதோடு தனக்கு எம்என்சி நிறுவனத்தில் இருந்து சம்பளம் வந்துள்ளதாக கட்டு கட்டாக பணத்தை காட்டி, அவற்றை வீடியோ எடுத்து, இதனை ஏழை மக்களுக்கு கொடுக்க உள்ளதாகவும் பலரை வலையில் சிக்கவைத்தார். குறிப்பாக 17 வயதுக்குள் குறைவான பெண்களை குறி வைத்து மாதேஷ் பழகி பெண்களை ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.