
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜரனின் வாழ்க்கை வரலாறு கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்த சுதா கொங்காரா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் அந்த கூட்டணி இணைந்துள்ள நிலையில் அதர்வா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
From an ardent cinema fan from Trichy to #SK25, it’s been an amazing journey filled with dreams. Thank you to everyone who believed in me and made this possible. Forever grateful for your love and support ❤️
Delighted to begin this incredible film with an incredible team today… pic.twitter.com/ChCrjGBHKP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 14, 2024