மராட்டிய மாநிலம் தானே நகரிலுள்ள நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 13 வயதுடைய சிறுமி ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருப்பதாய் உணர்ந்த அங்கு வேலை பார்க்கும் பெண் பராமரிப்பாளர் ஒருவர் சிறுமியிடம் கேட்டுள்ளார். பின்னர் சிறுமியின் பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் கடந்த ஜூலை மாதம் குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் ஜன்னல் வழியாக உள்ளே சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், இதே போல ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெவ்வேறு சந்தர்பங்களில் 3 ஆண்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பெண் பராமரிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி அறிந்த மற்றொரு பெண் பராமரிப்பாளர் சம்பவத்தை காவல்துறையினரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பெண் பரமாரிப்பாளர் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.