
அடுத்த மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும் என அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றார்கள்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சியில் சாலை பணிகளுக்கான ஒப்புதல் வரபெற்று இருக்கின்றன என புதிய ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மேயர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து சாலை பணிகள் செய்யப்படும் என தெரிவித்து இருக்கின்றார்.