
பிரபல நிறுவனமான கூகுள் தன் பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் வகையில் இப்போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று சைகை வழி செலுத்துதல் ஆகும். மேலும் தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகளையும் வழங்க உள்ளது.
இதன் வாயிலாக இனிமேல் பணப்பரிமாற்றத்தில் ஏற்படும் தவறுகள் மற்றும் தகவல்கள் திருடுதல் உள்ளிட்டவைகள் தடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இப்போது அறிமுகமாகியுள்ள இந்த புது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த ஆன்ராய்டு 14-ன் புதிய பதிப்பு Pixel 4a 5G, Pixel 5, Pixel 5a, Pixel 6, Pixel 6 Pro, Pixel 6a, Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஆகிய சாதனங்களில் கிடைக்கும் என கூகுள் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.