சாம்சங் நிறுவனமானது Samsung Galaxy M13 5G ஸ்மார்ட் போனில் 6.5 இன்ச் LCD டிஸ்ப்ளேவை வழங்கியிருக்கிறது. இதனுடைய ரெசல்யூஷன் 720×1600 பிக்சல்கள் மற்றும் 16M வண்ணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இருக்கிறது. அத்துடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு இந்த ஸ்மார்ட் போனில் கிடைக்கும். இதில் முதன்மை கேமிரா 50 MP பிரதான சென்சார் மற்றும் 2 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகும். செல்ஃபிக்கு 5MP கேமராவும் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மீடியா டெக் டைமென் சிட்டி 700 செயலி தடை இல்லாமல் செயல்படும் வகையில் மொபைலில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கைபேசியில் ரேமை விரிவுபடுத்தும் வசதியானது இருக்கிறது. அதே சமயத்தில் இந்த போன் ஆண்ட்ராய்டு 12ல் வேலை செய்கிறது. இது 5000mAh பேட்டரி உடன் வருவதோடு, 15W பாஸ்ட் சார்ஜிங்கின் ஆதரவை பெற்றிருக்கிறது. அத்துடன் மொபைலில் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M13 5Gன் 4GB RAM+64GB சேமிப்பு மாறுபாடானது Amazon Indiaல் ரூ.11,499-க்கு கிடைக்கும். பேங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் ரூபாய்.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு HSBC மற்றும் AU ஸ்மால் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு ரூ.250 தள்ளுபடியானது கிடைக்கும். இது தவிர்த்து ரூ.642 EMI மற்றும் ரூ.10,900 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் 5G போனில் வழங்கப்படுகிறது.