
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி. இவர்கள் தங்களுடைய 11-வது திருமண நாளை தற்போது கொண்டாடுகிறார்கள். இதை முன்னிட்டு நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவுக்காக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய அன்பு மனைவிக்கு இந்த திருமண நாளில் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டாலும் உன் கையைப் பிடித்துக் கொண்டு நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். உன்னுடைய அன்பு என்னை வழிநடத்தியதோடு எனக்குள் இருந்த இருள் முழுவதையும் நீக்கியது. நம் குழந்தைகள் கடவுள் நமக்கு கொடுத்த அன்பு பரிசு. நான் உன்னை என்னுடைய துணையாக பெற்றதற்கு எப்போதும் நன்றி உடையவனாக இருக்கிறேன். உன்னுடைய அன்பு மற்றும் புன்னகையால் என்னுடைய உலகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா விவாகரத்து பெற்று பிரியப்போவதாக சமீப காலமாகவே இணையத்தில் போலி செய்திகள் பரவிய நிலையில் தற்போது அவர்கள் தங்களுடைய 11-வது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இணையத்தில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram