
தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கோவாவில் நடைபெற்ற 54ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதினை வாங்குவதற்காக தனது மனைவி கேத்ரின், மகன் டைலன் ஆகியோருடன் இந்தியா வந்தார்.
இதனையடுத்து அவர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார். அந்த வகையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் மைக்கேல் டக்ளக் வந்தார். அவர் கழுத்தில் மாலை அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.