
சத்தீஸ்காரின் உள்ள மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் மற்றும் நாராயணபூர் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கூட்டாக நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை தாக்கினார். அதோடு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்களான கே.ராஜேஷ் மற்றும் அமர் சாம்ராவ் என்பது தெரியவந்தது. இவர்களைத் தவிர 2 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மரணமடைந்த 2 பேரின் உடல்களை மந்திரி டேங் ராம் வெர்மா தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாகவும், நக்சலைட்டுகள் இல்லாத நிலையை உருவாக்க மாநில அரசு தொடர்ந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.