
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதுடன் மீதமுள்ள தொகையை 3 சதவீத வட்டியுடன் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.