
செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக காங்கிரசை பொருத்தவரை பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. ஏன்னா இந்தியாவிலேயே தமிழக காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் உடைய தலைமையில் இருந்தபோது, பூரண மதுவிலக்கை தன்னுடைய கொள்கையாக அவர் வைத்திருந்தார்.
அவர் முதலமைச்சராக ஆனதற்கு பிறகு காங்கிரஸ் ஆண்ட சில மாநிலங்களில் கல்லு கடைகள் இருந்தன, மது விநியோகம் இருந்தது. அப்பொழுது பலர் அவரிடம் வந்து கேட்டார்கள். காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களிலேயே இருக்கிறது. ஆனால் குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் தான் இல்லை. மதுவை கொண்டு வருவதால் வருமானம் வருகிறது.
அதை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்யலாம். ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது, பத்திரிகையாளர்கள் கேட்டபோது தன்னுடைய மொழியில் அவர் பதில் சொன்னார்…. யாரோ ஒரு முட்டாள் தப்பு செய்கிறான் என்பதற்காக நானும் தப்பு செய்ய முடியுமா ? அதனால் மது கடைகள் இருந்தால் நாடு முன்னேறாது. நாம் மது கடைகளை கொண்டு வரமாட்டேன். இது தமிழ்நாடு காங்கிரசினுடைய கொள்கை என்று சொன்னவர். எனவே தமிழக காங்கிரஸ் பொறுத்தவரை பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை என தெரிவித்தார்.