கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு இவர் காவல் துறையில் பணியில் சேர்ந்த நிலையில் 2024 ல் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு கோவை வஉசி மைதானத்தில் உள்ள ஒரு புங்கை மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த இடத்திற்கு ரோந்து பணிக்காக சென்ற போலீசார் பார்த்த நிலையில் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சொக்கலிங்கத்தின் உடலை விட்டு பிறகு பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.