இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் திரைப்படத்துறையின் அடிப்படை தொழிலாளிகளான லைட்மேன்கள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நாளை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக 11:00 மணி வரை இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை மற்றும் 12 மணி வரை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.