
மும்பையில் வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் 19 வயதான வாலிபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்தக் கார் 4 வயது சிறுவனான ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடே மீது மோதியது. இதில் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இவர்களது குடும்பம் நடைபாதையில் வசிப்பதாகவும், அவரது தந்தை ஒரு தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு இந்த காரை ஓட்டி வந்தவர் சந்திப் கோல் என்ற வாலிபர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.