உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் ஒரு கடையில் வாங்கிய சமோசாவில் இறந்த நிலையில் சிலந்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர் ஒருவர் அந்த கடையில் சமோசா வாங்கி சாப்பிடும் போது, அதில் இறந்த சிலந்தி இருப்பதை கண்டுள்ளார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

வாடிக்கையாளர் உணவின் தரத்தை உறுதிப்படுத்தாத கடைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பலரும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டி விமர்சனம் செய்தனர். இதேபோல், இதற்கு முன்பு காஜியாபாத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சமோசாவில் இருந்து தவளையின் கால் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.