
இந்தியாவின் துணை கண்டமான இலங்கையில் சென்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனுரகுமாரா திசநாயகே வெற்றி பெற்றார். அதன்பின்பு அனுரகுமாரா இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அனுரகுமாரா பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பிரதமர் மோடியின் அழைப்பின்படி அனுரகுமாரா டெல்லிக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இலங்கையின் வெளிநாட்டு துறை அமைச்சர் விஜிதா ஹெரத் கூறியதாவது, அதிபர் அனுரகுமாரா நவம்பர் மாதத்திற்கு பின்பு தான் டெல்லி பயணம் மேற்கொள்வதாக உள்ளார். இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எங்களது அரசு வெற்றி பெற்ற பின்பே வெளிநாட்டு பயணம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.