சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை நட்சத்திர ஆந்தையை பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட ஆந்தை கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.