சீனாவில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஒரு அறையில் சில பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளில் இருந்து ஒரு நபர் கரப்பான் பூச்சிகளை வெளியே விடுகிறார். அவர் பெட்டியை எடுத்து கீழே தட்டியதும் உள்ளிருந்த பூச்சிகள் மளமளவென வெளியே வந்தன. அவ்வாறு வெளிவந்த ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் அப்பகுதி முழுவதும் பரவி காணப்பட்ட நிலையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த காட்சி சினிமா திரைப்படத்தில் வரும் காட்சி போல காணப்பட்டது. ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் வெளியே வருவதையும்,அந்த நபர் மிகவும் அமைதியாக கையாளுகிறார். அது அவருக்கு வழக்கமான ஒரு வேலை போலவே தெரிகிறது. இதைத் தொடர்ந்து சீனாவில் தற்போது கரப்பான் பூச்சிகளை வளர்த்து பாரம்பரிய மருத்துவத்திற்காக பயன்படுத்துகின்றனர். அதோடு மிருகங்களுக்கு உணவாக கழிவுகளை சுத்தப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தும் நிலையில் அந்நாட்டில் கரப்பான் பூச்சி தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் இதனை அறியாதவர்களுக்கு அந்த காட்சி ஒரு உள்நோய் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் “nightmare fuel” என்று வர்ணித்து பதிவிட்டுள்ளார். இன்னொருவர் “குடியிருப்பில் உள்ள அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, மேம்பாட்டு கட்டணத்தையும் வசூலிக்க நினைத்தால் இதை தான் செய்யணும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கரப்பான் பூச்சிகளின் பண்ணைகள் சரியான பாதுகாப்பு கட்டுப்பாட்டுகளுடன் இயங்கும் என சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.