காஷ்மீரில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அன்று சாலையில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தெரு நாய்கள், அவர்களைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தது. இதில் பயந்து போன அந்தப் பெண் தனது மகனை தூக்கிக் கொண்டு நடக்க முயன்றார்.

அப்போது அந்த 2-3 தெருநாய்கள் ஒன்று கூடி அவரை துரத்தியது. இதில் அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு நாயை துரத்தி விட்டனர். இதுதொடர்பான வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.