திருநெல்வேலியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் நெல்சன் மற்றும் ராபர்ட் என்பவர்கள் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறிய போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.