கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 12ம் வகுப்பு மாணவிக்கு தேர்வு அறையில் வைத்து முதுகலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அஞ்சூர் &ஜெகதேவி அரசு மேல்நிலை ப்பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுத சென்றார்.

அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவியிடம் அறையின் மேற்பார்வையாளராக வந்த போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பேச்சு கொடுத்தார். இந்நிலையில் திடீரென தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவியின் மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பயத்தில் செய்வதறியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். எனவே அந்த மாணவியால் தேர்வினை ஒழுங்காக எழுத முடியவில்லை. இதைத்தொடர்ந்து தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த மாணவி நீண்ட நேரமாக சோகமாக இருந்துள்ளார்.

இதனை கண்ட அந்த பள்ளியின் முதல்வர் மாணவியிடம் சென்று ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டபோது அந்த மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறினார். அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவியும் தனக்கும்  இவ்வாறு நடந்ததாக கூறியபோது தலைமை ஆசிரியர் செல்வம் மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ரமேஷ் மீது புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.