கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகத்தை ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆறுமுகம் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தது உறுதியானது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் ஆறுமுகத்தை பணியிட நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.