
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலரான வெங்கடேஷ் (50) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், அவரது மனைவி பிரபாவதி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் மனமுடைந்த வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற பிரபாவதி சமீபத்தில் தான் வீட்டுக்கு திரும்பியிருந்தார். தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.