
திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் சொந்த ஊரான விருதுநகர் அருப்புக்கோட்டைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே விருதுநகரை சேர்ந்த ஒருவரின் உடலை ஏற்றிய நிலையில் பாண்டிய பிரபுவின் உடலையும் ஏற்ற ஊழியர்கள் முயன்றுள்ளனர். இதனால் பாண்டி பிரபுவின் தந்தை துரைராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இதனால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறும் போது 108 அமரர் ஊர்தி உறுதியே கால் சென்டர் மூலம் பதிவு செய்வார்கள். அப்போது பாண்டி பிரபுவின் தந்தை முதலில் இருவர் உடலை எடுத்துச் செல்ல சம்மதித்து பின்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என தெரிவித்தார். இதனால் அவருக்கு தனி ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்.